சென்னையில் சினிமா பாணியில் நட்சத்திர விடுதியை விற்க முயன்ற 3 தரகர்கள் கைது!

சென்னையில் சினிமா பாணியில் நட்சத்திர விடுதியை விற்க முயன்ற 3 தரகர்கள் கைது!
தட்சணாமூர்த்தி, பரமானந்தன், கருணாகரன்
  • News18
  • Last Updated: February 3, 2020, 5:29 PM IST
  • Share this:
சென்னையில் சினிமா பாணியில் நட்சத்திர விடுதியை  விற்க முயன்ற 3 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பெயர் நட்சத்திர விடுதி விற்க போவதாக கூறி மூன்று பேர் கேரள கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளனர். அந்த நிறுவன மேலாளர் சென்னை வரும் போது, விற்பதாக கூறப்படும் அம்பிகா எம்பெயர் நட்சத்திர விடுதியில் 3 இடைத்தரகர்களும் அறை வாடகை எடுத்து விலை பேசியுள்ளனர்.

இந்த நட்சத்திர விடுதியின் விலை 165 கோடி என கேரள நிறுவன மேலாளரிடம் பேரம் பேசியுள்ளனர். இந்நிலையில் கேரளா மேலாளர் விடுதியை சுற்றி பார்க்கும் போது சந்தேகம் அடைந்த நட்சத்திர விடுதி மேலாளர் அழைத்து விசாரணை செய்துள்ளார்.


அப்போது கேரள நிறுவன மேலாளர் நட்சத்திர விடுதி விற்பது தொடர்பாக பேசியதால் அதிர்ச்சியானார். இதனையடுத்து போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் கேரள மேலாளர் உட்பட 3 தரகர்களை விசாரணை செய்த போது மோசடி செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் தட்சணாமூர்த்தி, பரமானந்தன், கருணாகரன் என தெரிய வந்துள்ளது. இது போன்று பல சொத்துகளை விற்பதாக கூறி மோசடி செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் முடிவு செய்துள்ளனர்.

Also see...
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்