பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்குத் தண்டனை விதித்த சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், இதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கிண்டியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக செஸ் சைல்டு லயன் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியை ஏழு வயதில் இருந்து பதினைந்து வயது வரை தனது தந்தை சூரியன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி கர்ப்பம் அடைந்த போது இந்த தகவலை தனது தாய் மாதவியிடம் தெரிவித்தபோது, கருவை கலைத்த அவர் சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் தந்தை சூரியன் மற்றும் தாய் மாதவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டது.
Also read... ஆவடியில் வீட்டிற்குள் விழுந்த துப்பாக்கி குண்டு - CRPF பயிற்சி மைதானத்தில் இருந்து வந்ததாக புகார்
இதையடுத்து, முதல் குற்றவாளியான தந்தை சூரியனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தாய் மாதவிக்கு ஆயுள் தண்டனையும் விதித்த நீதிபதி, பத்தாயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் எனவும் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.