Home /News /tamil-nadu /

சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மாதிரி படம்

மாதிரி படம்

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

  • News18
  • Last Updated :
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பாடி கலைவாணர்நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி தனது தோழியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடற்கரையின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

Also read... வலிமை ரிலீஸ் திரையரங்கு வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் - இளைஞர் கைது

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, செல்வராஜ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Pocso

அடுத்த செய்தி