Home /News /tamil-nadu /

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலுள்ள பொருட்கள் குறித்து இணையத்தில் பதிவேற்ற முடிவு

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலுள்ள பொருட்கள் குறித்து இணையத்தில் பதிவேற்ற முடிவு

சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் (படம்: Wikipedia)

சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் (படம்: Wikipedia)

வாழ்வியல் வழிகாட்டியான சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

    எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருப்பது வெறும் பொருட்கள் அல்ல. நம் முன்னோர்களின் வாழ்வியல். மிகப்பழமையான சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இங்கிருக்கும் பொருட்கள் பற்றிய விவரங்கள் அருங்காட்சியத்திலுள்ள புத்தகங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. வரும் காலத்தில் இந்த பதிவேடுகளைப் பாதுகாப்பது சிரமம் என்றும், ஒரு பொருளை பற்றிய விவரங்களைத் தேடி எடுப்பதிலும் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காலமாற்றம் காரணமாக, தற்போது பொருட்களின் வரலாற்றை புகைப்படத்துடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    Also read: அசர்பைஜான், அர்மீனியா நாடுகளுக்கிடையே தீராத மோதல் - போர் பதற்றத்தைத் தணிக்க ஐ.நா வலியுறுத்தல்



    பொருளின் புகைப்படம் மற்றும் அது தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், தேடி எடுப்பது எளிதென கூறும் அருங்காட்சிய அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தே அருங்காட்சியத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எளிதாக தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

    அருங்காட்சியக இணையதளத்தில், ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் குறித்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இந்த டிஜிட்டல் திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகத்தில் விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கின்றனர். இந்த தொழில்நுட்ப முறையால், சிலைக்கடத்தல், வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் தொலைந்துபோவது தடுக்கப்படும் என்றும் அவ்வாறு தொலைந்துபோனாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்றும் கூறுகிறார் அருங்காட்சிய ஆணையர் சண்முகம்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Chennai egmore

    அடுத்த செய்தி