திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தற்கொலை.. பணி அழுத்தம் காரணமா?

மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தற்கொலை.. பணி அழுத்தம் காரணமா?
மாதிரிப் படம்
  • Share this:
சென்னையில் WORK FROM HOME-ல் இருந்த காப்பீட்டு நிறுவன உழியருக்கு தற்கொலை செய்து கொண்டார். அலுவலக பணியால் மன அழுத்தம் என்கிறார் கணவர். வீட்டு வேலையில் மனைவிக்கு சிறு உதவிகூட கணவர் செய்யாததே காரணம் என்கின்றனர் பெண்ணின் உறவினர்கள். எது உண்மை?

 

கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தே அலுவலக பணியை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் பணி செய்பவர்கள் நேரம், காலம் இல்லாமல் அலுவலக பணியை மேற்கொள்ளும் நிலை உள்ளதால் கடும் மன உளைச்சலையும் சந்தித்து வருகின்றனர். மேலும், ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாலும் மனகசப்பு ஏற்பட்டு குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் வீட்டிலிருந்த பணி செய்த ஒரு இளம் பெண், திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமா?


ஊட்டியை சேர்ந்த 29 வயதான ஹரிகணேஷ் மற்றும் 29 வயதான பிரிய தர்ஷினி இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஹரிகணேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகவும், பிரிய தர்ஷினி நுங்கம்பாக்கத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணி செய்து வந்தனர்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக் எடுத்து வசித்து வந்துள்ளனர். வியாழக்கிழமை பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலறிந்து சென்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தே பிரியதர்ஷினி பணிப்புரிந்து வந்துள்ளார்.

புதன்கிழமை இரவு பிரியதர்ஷினி அலுவலக பணியை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது வங்கிப்பணியை முடித்து வந்த கணவர் ஹரிகணேசிடம் வீட்டு வேலை தொடர்பாக உதவி கேட்டுள்ளார்.

அப்போது வீட்டிலிருந்து எந்நேரமும் அலுவலக பணி பார்த்துக்கொண்ட இருப்பதாகவும், வீட்டு வேலை செய்வதில்லை என்கூறி ஹரிகணேஷ் சண்டை போட்டதாக தெரிகிறது. உதவி செய்யவும் மறுத்ததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பிரியதர்ஷினி தனி அறைக்கு உறங்க சென்றுள்ளார்.

பின்னர் வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து பிரியதர்சினி வெளியில் வராமல் இருந்துள்ளார். கோபத்தில் இருப்பதாக நினைத்து ஹரிகணேஷ் அலுவலகம் கிளம்பியுள்ளார்.

ஆனால் அலுவலகம் புறப்படும் வரை பிரியதர்ஷினி அறையைவிட்டு வராததால் கதவைத் தட்டி அழைத்துள்ளார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த கணவர் கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது பிரியதர்சினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரியதர்ஷினி வேலை பளுவின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக மாக சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி ஒருவருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading