மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! தொழிலாளர் நல ஆணையத்திடம் மனு

Web Desk | news18-tamil
Updated: September 10, 2019, 10:37 PM IST
மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! தொழிலாளர் நல ஆணையத்திடம் மனு
கோப்பு படம்
Web Desk | news18-tamil
Updated: September 10, 2019, 10:37 PM IST
சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக, தொழிலாளர் நல ஆணையத்திடம் நிரந்தர ஊழியர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களில், முதல்கட்டமாக 9 நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்டன. இந்த 9 இடங்களிலும், நிலைய கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும், ஒப்பந்த பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிரந்தர ஊழியர்கள் சங்கத்தினர், பயிற்சி இல்லாத ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதன் மூலம், பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, தொழிலாளர் நல ஆணையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Also Watch :

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...