ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை ஓஎம்ஆர் சாலையில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு

சென்னை ஓஎம்ஆர் சாலையில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு

சென்னை

சென்னை

சென்னை ஓஎம்ஆர் சாலையில் இருந்த மர்ம பெட்டி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் அடுத்த ராஜீவ்நகர் சிக்னல் அருகே மர்ம பெட்டி ஒன்று கிடந்துள்ளது. இதை கண்ட கண்ணகிநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ்(30) என்பவர் அருகில் உள்ள கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த காவல் துறையினர் நேரில் சென்று பார்த்தபோது கனமாக பெட்டி இருந்ததால் அவர்களும் பதட்டமடைந்த நிலையில் வெடிபொருள் எதேனும் இருக்குமோ என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு  வர வைத்தனர்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியலஷ்மி முன்பாக  பெட்டியை திறந்து பார்த்தபோது அதனுள் இரும்பு லாக்கர் பெட்டி இருந்தது. அதனை உடைத்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 35 கட்டு வெள்ளை தாள்களும், 3 இங்க் பாட்டில்களும் இருந்துள்ளது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மர்ம பெட்டியில் இருந்த வெள்ளை காகிதங்களும், இங்க் பாட்டில்களும் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்த பயன்படும் உபகரணங்கள் என போலீசார் தெரிவித்தனர்.இந்த பெட்டியை வீசி சென்ற நபர் யார்  கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலா, சென்னையில் கள்ள நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்படுகிறது என பல்வேறு கோணங்களில் கண்ணகி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர்: வினோத் கண்ணன் 

First published:

Tags: Chennai, Chennai Police, Tamil News, Tamilnadu