• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வீடுகளை இடிக்க எதிர்ப்பு... கூவம் ஆற்றில் இறங்கி குடிசைவாசிகள் போராட்டம்

வீடுகளை இடிக்க எதிர்ப்பு... கூவம் ஆற்றில் இறங்கி குடிசைவாசிகள் போராட்டம்

கூவம் இறங்கி குடிசைவாசிகள் போராட்டம்

கூவம் இறங்கி குடிசைவாசிகள் போராட்டம்

ஒரு சிலருக்கு இன்னும் வீடுகள் ஒதுக்கப்படாமல் முன்னறிவிப்பு இன்றி வீடுகளை இடித்துள்ளதாகவும் அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டினர்

  • Share this:
    சென்னை நகருக்குள் வீடுகளை ஒதுக்கித்தரக்கோரி காந்தி நகர் பகுதி மக்கள் கூவம் ஆற்றில் இறங்கி 6 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை தீவுத்திடல் அருகே உள்ள கூவம் ஆற்றோரம் காந்தி நகர்ப்உள்ளது. கூவம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி காலி செய்ய பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2019ம் ஆண்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இப்பகுதியில் இருந்த 2092 வீடுகளில், இதுவரை 1742 வீடுகள் காலி செய்யப்பட்டு இடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 350 வீடுகளை காலி செய்து இடிக்க இன்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி 8 கிலோ மீட்டருக்குள் வீடுகளை ஒதுக்கக்கோரியும், பெரும்பாக்கத்திற்கு சென்றால் வாழ்வாதரம் பாதிக்கப்படும் எனக்கூறி மதியம் 1 மணி அளவில் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு சிலருக்கு இன்னும் வீடுகள் ஒதுக்கப்படாமல் முன்னறிவிப்பு இன்றி வீடுகளை இடித்துள்ளதாகவும் அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டினர். தற்போது வசிக்ககூடிய இடத்தில் இருந்து 35 கிலோ மீட்டருக்கு அப்பால் குடியமர்த்தினால் குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்தும் பாதிக்கும் என்றனர்.

    இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பல மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்களிடம் மக்கள் பிரநிதிகளோ, ஆதிகாரிகளோ யாரும் பேச்சுவார்த்தைக்கு முன் வரவில்லை என்பது வேதனை எனவும், மக்கள் தங்கள் வாக்குகளை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இந்த போராட்டமானது சுமார் ஆறு மணி நேரம் நடந்தது. பின்னர், பீமாராவ் குடியரசு கட்சி மாநில தலைவர் லிங்கோஷ், பா.ரஞ்சித், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர்(பொறுப்பு) கிருஷ்ணராஜ் பேசியதை தொடர்ந்து போராட்டத்தை ஆற்றில் இருந்து வெளியே வந்தனர். போராடத்தின் போது மயக்கமடைந்தவர்களுள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 6 மணி நீடித்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான பரபரப்பு ஏற்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: