முடிந்தது புரட்டாசி... கறி, மீன் கடைகளில் அலைமோதும் கூட்டம்...!

முடிந்தது புரட்டாசி... கறி, மீன் கடைகளில் அலைமோதும் கூட்டம்...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: October 20, 2019, 12:16 PM IST
  • Share this:
புரட்டாசி மாதம் முடிவடைந்ததை அடுத்து கறி மற்றும் மீன் கடைகளில் அசைவம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைப்பதில்லை. இதனால் அசைவம் விற்கும் கடைகளிலும் வியாபாரம் டல்லாகவே இருந்தது.

கடந்த வியாழக்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமையான் இன்று கோழி, ஆடு மற்றும் மீன் விற்கும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


இதனால் சிந்தாரிதிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக விலை குறைந்திருந்த அசைவ உணவுகளின் விலை மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.

First published: October 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...