ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடிநீருக்காக தூக்கத்தைத் தொலைத்த சென்னை மக்கள்!

குடிநீருக்காக தூக்கத்தைத் தொலைத்த சென்னை மக்கள்!

 கோப்புப் படம்

கோப்புப் படம்

தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சென்னை மக்கள்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

சென்னை மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகள்தோறும் குறைந்த அளவு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நள்ளிரவு நேரத்தில் விநியோகிப்பதால் மக்கள் கண் விழித்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை மாநகரில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுமையாக வறண்டுவிட்டதால், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், குடிநீர் வாரியம் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் தண்ணீர் விநியோகிப்பதாக சென்னை மக்கள் புகார்: தியாகராய நகரில் உள்ள தாமஸ் சாலை குடியிருப்பு பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நள்ளிரவில் விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், தண்ணீர் பிடிக்க நேரம் காலம் பார்க்காமல் விழித்திருக்க வேண்டியிருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இரவு கண் விழிப்பதால் மறுநாள் வேலை கெடுகிறது என மக்கள் வேதனை: நள்ளிரவில் தண்ணீரை விநியோகிப்பதால் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் நீர் பிடிக்க செல்வது அச்சமாக இருப்பதாகவும், இரவு முழுவதும் கண் விழித்திருப்பதால் மறுநாள் பணிக்கு எப்படி செல்ல முடியும் என்றும் கேள்வியெழுப்புகின்றனர். எனவே, காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என்று சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"ஆந்திர அரசிடம் பேசி கிருஷ்ணா நதி நீரை பெற வேண்டும்" என்று வலியுறுத்தல்: வள்ளுவர் கோட்டத்தில் உள்ள குடிநீர் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான லாரிகளில் எஞ்சியிருக்கும் நீரை பிடித்துச்செல்ல நள்ளிரவில் இளைஞர்களும், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு மிதிவண்டிகளில் வந்து செல்கின்றனர். தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன், ஆந்திர அரசிடம் வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய கிருஷ்ணா நதிநீரை பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Also see... தமிழகத்தில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்டவர் ஆந்திராவில் சிக்கினார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Drinking water