சென்னையில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் வட மாநில கும்பல்: அச்சத்தில் மக்கள்!

தாம்பரம் சானடோரியம் பகுதியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

சென்னையில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் வட மாநில கும்பல்: அச்சத்தில் மக்கள்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 8, 2019, 3:12 PM IST
  • Share this:
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் வட மாநில கும்பலால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சானடோரியம், சிட்லபாக்கம், சேலையூர், குரோம்பேட்டை போன்ற பகுதியில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டை குறிவைத்து கொள்ளை நடைபெற்று வருகின்றன.

தாம்பரம் சானடோரியம் பகுதியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

தாம்பரம் சானடோரியம் ஜெயா நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீதர்-லாவன்யா தம்பதி வீடு, ஜெயா நகர் 3-வது குறுக்கு தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மனைவி முன்னாள் ஆசிரியர் ராஜலட்சுமியின் வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டிருந்தாலும் வடமாநில கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருவதாகவும், இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see...
First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading