மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை!

ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம், மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையமும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

news18
Updated: April 30, 2019, 2:34 PM IST
மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை!
மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம்
news18
Updated: April 30, 2019, 2:34 PM IST
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண்பது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணி வரன்முறை செய்ய வேண்டும், அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கக் கூடாது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பணியாளர் சங்கம் தொடங்கிய 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.


இன்றும் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்வதால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களை கொண்டு ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

முக்கியத் தடமான சென்னை விமான நிலையத்திற்கு ரயில்கள் இயக்கப்படவில்லை. பயிற்சி பெறாத ஒப்பந்த ஊழியர்கள் ரயில்களை இயக்குவதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம், மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையமும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என மெட்ரோ தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading...

Also see...

First published: April 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...