20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சென்னைச் சிறுவன்! பெற்றோருடன் இணைந்த சுவாரஸ்யம்

நாகேஷ்வரன், சிவகாமி தம்பதி கடந்த இருபது வருடங்களுக்கு முன் சென்னை புளியந்தோப்பில் மகன் அவினாஷை ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரால் கடத்தப்பட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சென்னைச் சிறுவன்! பெற்றோருடன் இணைந்த சுவாரஸ்யம்
பெற்றோருடன் அவினாஷ்
  • News18
  • Last Updated: September 10, 2019, 10:28 PM IST
  • Share this:
1999 ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோத தத்தெடுப்புக்காக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட குழந்தை 22 வயது மகனாக மீண்டும் தன் பெற்றோரை அடைந்த செய்தி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

சென்னை புளியந்தோப்பில் இருபது வருடங்களுக்கு முன் நாகேஷ்வரன், சிவகாமி தம்பதியின் மகன் அவினாஷ் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரால் கடத்தப்பட்டுள்ளார். பின் அவரை சட்டத்திற்கு விரோதமாக குழந்தைகளைக் கடத்தி தத்துக் கொடுக்கும் மலேசிய சமூக சேவை என்ற மையத்தில்( Malaysian Social Service (MSS)) விற்றுள்ளனர். இந்த சேவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில்தான் அதிகமாக நடந்து வருகிறது. அப்படி இதுவரை 300 குழந்தைகளுக்கு மேல் சென்னையிலிருந்து கடத்தப்பட்டுள்ளதாக நியூஸ் மினிட் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

source : news minuteஅப்படி அவினாஷும் அமெரிக்காவில் உள்ள தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். 2009 ஆண்டு மதர் ஜோன்ஸ் என்ற பத்திரிகையில் பெற்றோரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதில் அவருடைய சிறு வயது புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அதைப் பார்த்துதான் அவினாஷ் தன் பெற்றோரை அடையாளம் கண்டுள்ளார்.

22 வயதான அவினாஷ் தன் பெற்றோரை பார்த்ததும் கண்ணீர் மழையால் நனைந்துள்ளார். அவினாஷ் வளர்ந்தது அமெரிக்கா என்பதால் தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்துள்ளது. இருப்பினும் அவினாஷின் வழக்கறிஞர் உதவியோடு பெற்றோரிடம் அன்பு வார்த்தைகளைப் பொழிந்துள்ளார்.

source : news minute
நாகேஷ்வர் பெயிண்டராக இருக்கிறார். சிவகாமி இல்லத்தரசியாகவும் தற்போது அவர்களுக்கு சரளா என்ற மகளும் லோகேஷ் என்ற மகனும் உள்ளனர்

சட்டவிரோத தத்தெடுப்பு சேவையைச் செய்து வந்த MSS மீது இந்த வருட தொடக்கத்திலேயே வழக்கு தொடரப்பட்டது. சட்டத்திற்கு எதிரான செயலைச் செய்த குற்றத்திற்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த குற்றத்தின் மிக முக்கிய நபராக கருதப்பட்ட இயக்குநர் ரவீந்தரநாத் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதாக நியூஸ் மினிட் குறிப்பிட்டுள்ளது.

பார்க்க :

மதுரை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் 4 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தாததால், 20 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

First published: September 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்