ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை: கஞ்சா திருடன் கைது.. கை, கால் முறிவு

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை: கஞ்சா திருடன் கைது.. கை, கால் முறிவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

போலீசாரை கண்டதும் அங்கிருந்து சதீஷ் தப்பி ஓடிய பொது மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஒரு கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை  மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

பல்லாவரம் அருகே வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையனுக்கு பணம், நகை கிடைக்காததால் கத்தி முனையில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.  போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதில் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து கை கால் முறிவு ஏற்பட்டது.

சென்னை பல்லாவரம் அடுத்த குன்றத்தூர் கோவூர் பகுதியில் 21,வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் மேல்தளத்தில் தனது  அரையில் இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டதும் கதவைத் திறந்து பார்த்தபோது ஒரு மர்ம நபர் உள்ளே புகுந்து அந்த பெண்ணை தாக்கி கத்தியை காட்டி பணம் நகை கேட்டுள்ளார். தன்னிடம் பணம் நகைகள் எதுவும் இல்லை என்று கூறியதும் அந்தப் பெண்ணை கத்திமுனையில் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை  செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் குன்றத்தூர் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை செய்த போது வீட்டிற்குள் வந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததாகவும், சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் என்ற தகவலை மட்டுமே தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் கஞ்சா போதையில் கொள்ளை சம்பவத்தில்ஈடுபடும் நபர்களின் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை அந்த பெண்ணிடம் காண்பித்தபோது ஒரு நபரை அடையாளம் காட்டினார்.

இதையும் படிங்க: 30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழும் பெண்.. அடையாளத்தை மாற்றி முத்து மாஸ்டராக வாழ்ந்ததன் நெகிழ்ச்சி பின்னணி!

பின்னர் அவரைக் குறித்து விசாரணை செய்த போது குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது-19) என்பது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் பிடிக்க குன்றத்தூர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டில் இல்லாததால் அவரது தொலைபேசி எண் சிக்னலை ட்ரெஸ் செய்து பார்த்ததில் அவர் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருப்பதாக தெரியவந்தது.

அங்கு விரைந்த போலீசார் சதீஷை மடக்கி பிடித்து கைது செய்ய முற்பட்டபோது போலீசாரை கண்டதும் அங்கிருந்து சதீஷ் தப்பி ஓடிய பொது மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஒரு கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை  மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு குன்றத்தூர் போலீசார் இந்த வழக்கை தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி குற்றவாளியே அவர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க: கமலின் ‘பாபநாசம்’ பட ஸ்டைலில் இளைஞர் கொன்று புதைப்பு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்..

பின்னர் மகளிர் போலீசார் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் கம்பெனியில்

சதீஷ் வேலைக்கு செல்வது வழக்கம் இவர் வேலைக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் பால்கனியில் நின்று செல்போனில் பேசுவதை பார்த்தபடி சென்றுள்ளார். மேலும் சதீஷ் ஆண் நபர்கள் இல்லாத வீடுகள் மற்றும் ஆட்கள் இல்லாத வீடுகளை மட்டும் குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர் என்பது தெரியவந்தது.

கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு பெருங்களத்தூர் பகுதியில 30 நாட்களில் அடுத்தடுத்து எட்டு வீடுகளில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி பெருங்களத்தூர் போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்று சமீபத்தில்தான் வெளியே வந்துள்ளார்.  சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்ற ஆண் நபர்கள் யாரும் இல்லை வீடுகளை நோட்டமிட்டுள்ளார்.

இதை படிக்க: கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு- ஓர் அலசல்!

அப்போது பாதிக்கப்பட்ட வீட்டு பெண்ணின் வீட்டில் ஆண் நபர்கள் இல்லாததை அறிந்து கொண்ட அவர் இரண்டு நாளுக்கு முன்பு கஞ்சா போதையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து  பணம்,நகை ஆகியவற்றை தரும்படி கேட்டுள்ளார். தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த பெண் கூறியதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் கஞ்சா போதையில் அங்கேயே படுத்து உறங்கி விட்டு ‘ இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வருவேன் எனக்கு ரூ.15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்ல கூடாது’ எனவும் கூறி மிரட்டி விட்டு அதிகாலையில் அங்கிருந்து கிளம்பி சென்றதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் கை கால் முறிவு ஏற்பட்டசதீஷ் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் - சுரேஷ்

First published:

Tags: Arrest, Sexual harassment, Thief