Cyclone Nivar | இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் பழவந்தாங்கல் சுரங்கப் பாதை மூடப்பட்டது..
இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பழவந்தாங்கல் சுரங்கப் பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுரங்கப் பாதை மூடப்பட்டது.

- News18 Tamil
- Last Updated: November 25, 2020, 5:09 PM IST
நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்து பெருமளவில் பாதிப்படைந்த மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பழவந்தாங்கல் கண்ணன் காலனி பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து ஆலந்தூர் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குடியிருப்புப் பகுதிகளிலும் வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீரால் தேங்கி மூழ்கி உள்ளது.
மேலும் படிக்க...சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளையும் பொதுவிடுமுறை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
இதனால் அதிகாரிகள் சுரங்கப்பாதையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுரங்கப்பாதை முழுவதும் மூடப்பட்டது.