Home /News /tamil-nadu /

சென்னை சாலைக்கு நடிகர் விவேக்கின் பெயரை சூட்டிய தமிழக அரசு

சென்னை சாலைக்கு நடிகர் விவேக்கின் பெயரை சூட்டிய தமிழக அரசு

விவேக் பெயரில் சாலை

விவேக் பெயரில் சாலை

விவேக்கின் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதை திரைத் துறையினரும் சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

    சென்னையில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு, மறைந்த நடிகர் விவேக்கின் பெயரை தமிழக அரசு சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளது.

    விவேக் இல்லம் அமைந்திருக்கும் பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று, சில நாட்களுக்கு முன்பாக அவரது மனைவி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்நிலையில் பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டு அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது-

    திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர். கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் கடந்த 17.04.2021 அன்று இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.

    அன்னாரின் நினைவாக அவர்தம் வரித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-10, பகுதி-29, வார்டு-128-ல் அமைத்துள்ள பத்மாமதி நகர் பிராதன சாலையினை அப்பகுதி வாழ் மக்கள். சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் "சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர்மாற்றம் செய்திட விருப்பம் தெரிவித்துள்ளனர்.



    தமிழக முதலமைச்சர் அவர்கள் அலுவலகத்தில் பூச்சி S. முருகன், துணைத் தலைவர். தென்னிந்திய நடிகர் சங்கம் அவர்களின் 18.04.2022 தேதியிட்ட கடிதத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சாலை அல்லது தெருவிற்கு "சின்னக் கலைவாணர் விவேக்  சாலை" என பெயர் சூட்டுமாறு கோரியுள்ளார்.



    அதனடிப்படையில், மறைந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் சின்னக் கலைவாணர். கலைமாமணி, பத்மஸ்ரீ திரு. விவேக் அவர்களின் நினைவாக, அவர்தம் புகழினை பறை சாற்றும் வகையில் அவர் மறைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அன்னாரின் நினைவாக அவர்தம் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையினை மாமன்றத்தின் பின்னேற்பு அனுமதிக்குட்பட்டு, "சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என பெயர் மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் மாண்புமிகு மேயர் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதையும் படிங்க - கிழக்குக் கடற்கரை சாலைக்கு 'முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி' பெயர் சூட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    இதற்கேற்ப உரிய பெயர் மாற்றத்தினை செய்து அரசாணை வெளியிடுமாறு பெருநகர சென்னை மாநகராட்சியின் முதன்மைச் செயலாளர்/ ஆணையர் அவர்கள் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க - மே மாதத்தில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் உயரும்... மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

    இவற்றை பரிசீலித்து திரு. விவேக் அவர்கள் நினைக வந்த பத்மாவதி தகர் பிரதான சாலையினை *சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என பெயர் மாற்றம் செய்து அரசு ஆணையிடுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vivek

    அடுத்த செய்தி