ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை - தமிழிசை சவுந்தரராஜன்

”ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது”

Web Desk | news18
Updated: August 22, 2019, 8:18 AM IST
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
Web Desk | news18
Updated: August 22, 2019, 8:18 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகவும் அந்த குழப்பங்களுக்கு அவரே காரணம் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்ற அவர் ப.சிதம்பரம் இவ்வழக்கை சட்டரீதியாக அணுகவில்லை என குற்றம்சாட்டினார்.


அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால், சிதம்பரம் ஏன் விசாரணைக்கு வரவில்லை என கேள்வியெழுப்பிய தமிழிசை, ப. சிதம்பரம் வழக்கை எதிர்கொண்டவிதம் மோசமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றார்.

அமித்ஷாவுக்கும் ப.சிதம்பரம் கைதுக்கும் தொடர்பில்லை என மறுத்த அவர், இவ்விவகாரத்தை ஜனநாயகப் படுகொலை என காங்கிரஸ் கட்சியினர் கூறுவது அர்த்தமற்றது என தெரிவித்தார்.

Also see... காங்கிரசில் இணைய விருப்பம் தெரிவித்த தமிழிசை

Loading...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...