தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை..

தீரன் சின்னமலை சிலைக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மரியாதை

தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினர்.

 • Share this:
  சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னதாக சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  Published by:Rizwan
  First published: