மகளின் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலாக வந்த சீட்டுக்கட்டு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

முகநூல் விளம்பரத்தை பார்த்து செல்போன் ஆர்டர் செய்தவர்களுக்கு, சீட்டுக்கட்டு அனுப்பப்பட்டுள்ள சம்பவம், சென்னை புறநகர் பகுதியில் நடந்துள்ளது.

மகளின் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலாக வந்த சீட்டுக்கட்டு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
செல்போன் ஆர்டர் செய்தால் பார்சலில் சீட்டுக்கட்டு வந்ததால் அதிர்ச்சி
  • News18 Tamil
  • Last Updated: September 9, 2020, 12:09 PM IST
  • Share this:
ஒட்டியம்பாக்கம் ஊராட்சி அரசன்கழனி வேடந்தாங்களைச் சேர்ந்தவர் முகமது அலி. 12,000 ரூபாய் செல்போனை 2999 ரூபாய்க்கு தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து, தனது மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக, ஆர்டர் செய்துள்ளார்.

பணத்தை கொடுத்துவிட்டு பார்சலை பிரித்து பார்க்குமாறு டெலிவரி பாய் கூற, அதனை கேட்காமல் முகமது அலி பார்சலை பிரித்துள்ளார். அப்போது செல்போனுக்கு பதில் 2 சீட்டுக்கட்டு இருந்ததை கண்டு முகமது அலி அதிர்ச்சி அடைய, டெலிவரி பாயோ பார்சலுக்கும் டெலிவரிக்கும் சம்பந்தமில்லை எனக்கூறி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார்.படிக்க...இன்று கூடுகிறது திமுகவின் பொதுக்குழு


அக்கம்பக்கத்தினர் உதவியுடன் டெலிவரி பாயை பிடித்த முகமது அலி, பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading