• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொடர் ஆன்லைன் பணமோசடி புகார்கள்.. உடனடி நடவடிக்கை மூலம் பணத்தை மீட்டுக்கொடுத்த சைபர் கிரைம் போலீசார்..

தொடர் ஆன்லைன் பணமோசடி புகார்கள்.. உடனடி நடவடிக்கை மூலம் பணத்தை மீட்டுக்கொடுத்த சைபர் கிரைம் போலீசார்..

புகார் கொடுக்கப்பட்ட சில தினங்களிலேயே மோசடி செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர் கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் பிரிவு போலீசார்.

  • Share this:
கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் ரூபல். இவர் தனது மொபைலில் ’டூஃபாஸ்ட்’ என்ற செயலி தெரியாமல் இன்ஸ்டால் ஆகியதாகவும், பின்னர், அதன் மூலமாக ரூபாய் 4,985 பணம் மோசடி செய்யப்பட்டதாகவும் புகார் அளித்திருந்தார். வழக்குப்பதிவு செய்த கீழ்பாக்கம் காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஒரு சில தினங்களிலேயே ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அதேபோல கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சாந்திலால் சேட் (55) என்பவருக்கு கடந்த மாதம் 16ம் தேதி அவர் பயன்படுத்தி வரும் கோடாக் மகேந்திரா வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. வங்கி கணக்கு விவரங்களை சரிபார்ப்பதாகச் சொல்லி இவரிடம் ஓ.டி.பி எண்ணைப் பெற்று, உடனடியாக இவரது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 22,999 பணத்தை மோசடி செய்துள்ளனர்.

Also read: திமுகவில் தொடங்கிய பயணமும்.. குஷ்புவின் கடந்த பத்தாண்டு கால அரசியலும்..

இந்தச் சம்பவத்தில் வங்கி மேலாளர் போல பேசிய நபருக்கு ஓ.டி.பி எண்ணைக் கொடுத்தது தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்து வரும் சாந்திலால் சேட்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து அவர் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் வங்கியின் மேலாளரிடம் தொடர்புகொண்டு பணம் எந்த வங்கி கணக்குக்குச் சென்றுள்ளது என அறிந்து ஒரு வாரத்திற்குள் அந்தப் பணத்தை சாந்திலால் சேட்டுக்கு மீட்டுக் கொடுத்தனர்.



அதேபோல கடந்த மாதம் 22-ஆம் தேதி ஐ.சி.எஃபை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவர் ஓ.எல்.எக்ஸ் மூலமாக ரூபாய் 21,000 பணம் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்திருந்தார். மோசடி செய்வரின் மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்து குற்றவாளியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.21,000 பணத்தை மீட்டுக்கொடுத்துள்ளனர்.

ஐ.சி.எஃப் பகுதியில் 17 வயது பள்ளி மாணவியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக வந்த புகார் உட்பட, சென்னை காவல்துறை உயரதிகாரிகள் 2 பேரின் பெயரில் போலியாக முகநூல் பக்கங்கள் உருவாக்கப்பட்டு பண மோசடி செய்வதாக வந்த புகார்களைத் தொடர்ந்து 3 சமூக வலைதளப் பக்கங்களை கீழ்பாக்கம் சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவரும் கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் போலீசாரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: