துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தைக் கடத்திவந்த 3 பேரை சுங்கத் துறையினர் கைது செய்தனர். வெளிநாடுகளிலிருந்து மீட்பு விமானங்களில் வருபவர்கள், தங்கத்தைக் கடத்திவரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டிக்கெட் எடுக்க பணம் இல்லாத நபர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து, அவர்கள் மூலம் தங்கத்தைக் கடத்திவரும் நடவடிக்கையில் சர்வதேச கடத்தல் கும்பல் ஈடுபட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்தது.
இதனடிப்படையில், துபாயிலிருந்து வந்த பயணிகளை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கத்தை மூன்று பேர் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைதுசெய்த அதிகாரிகள், கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Rizwan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.