சென்னையில் டியூஷன் படிக்கவந்த மாணவியை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் சில்மிஷம்... இளைஞர் கைது

சென்னையில் டியூஷன் படிக்கவந்த மாணவியை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் சில்மிஷம்... இளைஞர் கைது
  • News18
  • Last Updated: November 6, 2019, 12:01 PM IST
  • Share this:
சென்னை தியாகராயநகரில் டியூஷன் படிக்கவந்த மாணவியை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் சில்மிஷம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை தி நகரில் இயங்கி வருகிறது காஞ்சனா டியூஷன் சென்டர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இங்கு பத்தாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் டியூஷன் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரு மாணவியின் பெற்றோர் டியூஷன் சென்டருக்கு எதிரே உள்ள வீட்டில் குடியிருக்கும் பாலாஜி என்பவர் தனது மகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலாஜியை கைது செய்து விசாரித்தபோது டியூஷன் படிக்க வந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தும் மேலும் அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மொபைல் சேமித்து வைத்து மிரட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


அதுமட்டுமில்லாமல் டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவிகளை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மொபைலில் சேமித்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பாலாஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also watch

First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்