செய்தி வாசிப்பாளர் பணி ஆசைக் காட்டி, இளம்பெண்ணிடம் நூதன கொள்ளை - மோசடி தம்பதி கைது

சென்னையில் செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை என்று வந்த போலி விளம்பரத்தை நம்பி சென்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் நகையை இழந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டு கும்பலை போலீசார் கைது செயுதுள்ளனர் விசாரணையில் தெரியவந்தது என்ன?

  • News18 Tamil
  • Last Updated: November 17, 2020, 10:00 AM IST
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயதான மினிமோல். சினிமாவில் நடிக்க வேண்டும் , செய்திவாசிப்பாளராக ஆக வேண்டும் என்ற ஆசையில் பல தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தையும் அனுகியுள்ளார் மினி. கடந்த சில வாரத்திற்கு முன்பு OLX என்ற ஆப்பில் சினிமா வாய்ப்பிற்கு ஆட்கள் தேவை என்ற விளம்பர்தை பார்த்துள்ளார். பின்னர் அதில் குறிப்பிட்டிருந்த தொடர்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசியவர்கள் நாங்கள் சினிமா மற்றும் செய்திவாசிப்பு நிறுவனத்தில் ஆட்களை சேர்த்துவிடும் ஏஜென்சி என்று சொல்லியுள்ளனர்.

மேலும் தற்போது பிரபல செய்தி நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேர்வு நடைபெறுவதாகவும் கூறியுள்ளனர். வேண்டும் என்றால் அதில் பங்கேற்குமாறு மினியை அழைத்துள்ளனர். துரைப்பாக்கத்திற்கு வழி தெரியாது என்று சொல்ல அலுவலக உதவியாளர் தீபக் என்பவரை அனுப்பி மினியை அழைத்து வர வைத்துள்ளனர் அந்த கும்பல்.

தனியார் ஹோட்டலுக்கு வந்த மினியிடம் ராவின் பிஸ்ட்ரோ என்பவரும் தீபா என்பவரும் ஏஜென்சி மேலாளர் என்று அறிமுகம் ஆகியுள்ளனர். இருவரும் மினியிடம் நேர்காணல் செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த ஒரு கேமிராவை காட்டி மேக்கப் மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர்.


மேக்கப் போடும்போது கழுத்தில் தங்க நகை அணிந்திருக்ககூடாது என இருவரும் கூறியுள்ளனர். அதை நம்பிய மினி கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி வைத்துவிட்டு முகம் கழுவ கழிவறைக்கு சென்றுள்ளார். உடனே சுதாரித்த கும்பல் மினிமோல் கழிவறையின் வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு தொலைக்காட்சி சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

மினிமோல் சத்தம் கேட்டு வந்த பணியாளர்கள் அவரை மீட்டனர் அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக மினி துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.சிசிடிவி காட்சிகளை பெற்ற போலீசார் விசாரணை நடத்தினர். பாலவாக்கம் குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த தேனி பண்ணையாபுரம் பகுதியை சேர்ந்த 30 வயது ராவின் பிஸ்ட்ரோ மற்றும் சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 38 வயதான தீபா என்கின்ற செண்பகவல்லி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் படிக்க...கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தேர்வுக்காக படித்தேன்’ - மருத்துவபடிப்பில் இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவிகணவன் மனைவியான இருவரும் இது போன்ற விளம்பர மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. கைதான தீபா கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூர், நீலாங்கரை காவல் நிலையத்தில் ஊர் காவல்படையில் பணிபுரிந்தவர். பணம் சம்பாதிக்கும் ஆசையில் OLX-ல் செய்தி வாசிப்பாளர் மற்றும் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தி நூதன மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக ஹோட்டலில் அறை எடுக்கும்போது மினிமோல் ஆதார் கார்டை கொடுத்து அறை எடுத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கணவன்-மனைவி இருவர் மீது வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading