இறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி

சென்னை கே.கே.நகரில் உயிரிழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் கொரோனா முகாமிலிருந்து இரண்டு தப்பி ஓடியுள்ளார்.

இறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி
சென்னை கே.கே.நகரில் உயிரிழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் கொரோனா முகாமிலிருந்து இரண்டு தப்பி ஓடியுள்ளார்.
  • Share this:
சென்னை கே.கே நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த கஸ்தூரி என்ற மூதாட்டி அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அங்கிருந்து தப்பியோடிய மூதாட்டியைப் பற்றி தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் தேடி வந்தனர்.

இச்சூழலில், ஆட்டோ மூலமாக நெய்வேலியில் இருக்கும் தனது மகளைக் காணச் சென்றுள்ளார். அப்பொழுது ஆட்டோ ஓட்டுநரின் தொலைப்பேசி மூலமாக தனது மகளின் தொலைப்பேசிக்கு தொடர்பு கொண்ட மூதாட்டி தான் அங்கு வருவதை தெரிவித்துள்ளார்.

கொரோனா சென்டரில் கஸ்தூரி மூதாட்டியின் தொடர்பு எண்ணாக தனது மகளின் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். போலீசார் அவரை தொடர்பு கொண்ட பொழுது அவரது அம்மா தன்னை பார்க்க ஆட்டோ மூலமாக வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து ஆட்டோ ஓட்டுனரின் தொலைப்பேசி எண்ணையும் கொடுத்துள்ளனர்.


ஆட்டோ ஓட்டுனரிடம் தொடர்பு கொண்டு விசயத்தை தெரிவித்த போலீசார் திண்டிவனம் அருகே சென்று கொண்டு இருந்த அவர்களை சென்னை கொண்டு வந்துள்ளனர். சென்னை எம்ஜிஆர் நகர் மார்கெட் பகுதிக்கு வந்ததும் அந்த மூதாட்டி மீண்டும் தப்பியோடியுள்ளார்.

போலீசார் மீண்டும் அந்த மூதாட்டியை மீட்டு உங்களுக்கு ஒன்று நேராது நாங்கள் மருத்துவமனையில் நல்ல முறையில் பார்த்துகொள்ள சொல்கிறோம் என ஆறுதல் வார்த்தைக் கூறி கேகே நகர் ESI கொரோனா சென்டரில் சேர்த்துள்ளனர்.

கொரோனா தொற்றால் தான் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் தனது அன்பு மகளை காண ஆட்டோ மூலம் தப்பி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading