முக்கிய முடிவுகள் எதிர்பார்க்கப்படும் அதிமுக உயர்மட்டக் குழு இன்று கூடுகிறது..

அதிமுக உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

முக்கிய முடிவுகள் எதிர்பார்க்கப்படும் அதிமுக உயர்மட்டக் குழு இன்று கூடுகிறது..
ஓ பன்னீர் செல்வம் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 9:02 AM IST
  • Share this:
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

அப்போது நம்பவர் மாதம் கட்சி பொதுக்குழுவை கூட்டுவது, 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும், பூத் கமிட்டிகளை விரைவாக அமைப்பது, ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 25 இளைஞர் பாசறை நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க...வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை


அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading