பலரது கவனத்தை ஈர்த்த வடசென்னை 'பிளாக் பாய்ஸ்' இசைக்குழு

வாழ்க்கையில் தடம் மாறும் இளைஞர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்துவரும் லோகன், அவர்களை ஒருங்கிணைத்து பிளாக் பாய்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கியுள்ளார்.

  • Share this:
சென்னையில் திரைப்பட பாடலாசிரியர் ஒருவர், வாழ்க்கையில் இலக்கு எதுவுமின்றி இருந்த வட சென்னை இளைஞர்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய இசைக்குழு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

வட சென்னையின் மூலை முடுக்குகளில் காலத்திற்கேற்ற ட்ரெண்டுடன் ஒலித்துவரும் கானா பாடல்கள், வெள்ளித்திரையையும் அலங்கரித்துவருகிறது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த லோகன் என்பவர், காலா, காஞ்சனா-2, லூசிபர் என 100-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

வாழ்க்கையில் தடம் மாறும் இளைஞர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்துவரும் லோகன், அவர்களை ஒருங்கிணைத்து பிளாக் பாய்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கியுள்ளார். சமூக அவலங்களையும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை இந்த பிளாக் பாய்ஸ்.


லோகன் அளித்த ஊக்கத்தால் கானா பாடல்களை பாடுவது மட்டுமின்றி பலர் பாடலாசிரியர்களாகவும் மாறினர். பிளாக் பாய்ஸ் குழுவைச் சேர்ந்த அனீஷ், சுனில் ஆகியோர் மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கமிங் பாடலை எழுதியிருக்கின்றனர்.

இவர்களது மேடை நிகழ்ச்சிகளை பார்த்து, தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. கானா, ராப் பாடல்களுடன் நடனத்தையும் கலந்து இவர்கள் வெளிப்படுத்தும் திறமைக்கு பார்வையாளர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.திரைப்படங்களில் பங்களிப்பது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவை மட்டுமின்றி, சமூக அக்கறையுடன் கூடிய இசை ஆல்பங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளனர் பிளாக் பாய்ஸ் குழுவினர்.
First published: September 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading