சென்னையில் நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது: எஸ்.பி.வேலுமணி

மாற்று வழியில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.

சென்னையில் நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது: எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
சென்னையில் நவம்பர் மாதம் வரை தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், குடிநீர் திட்ட செயல்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக சென்னையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், குடிநீர் வாரிய இயக்குநர் மகேஸ்வரன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, போதிய மழைப் பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதனால், மாற்று வழியில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருவதாகக் குற்றம்சாட்டினார்.


தமிழகம் முழுவதும் 14 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடிநீர் வழங்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

சென்னையில் குடியிருப்புவாசிகளுக்கு லாரிகள் மூலம் 10,000 நடை தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று கூறிய அவர், வரும் நவம்பர் மாதம் வரை தண்ணீர் விநியோக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Also see... தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading