சிக்கனில் எலும்பில்லை.. சப்ளையரை தாக்கிய திமுக பிரமுகர்..

Youtube Video

சென்னை அருகே ஓட்டலில் சாப்பிட வாங்கிச் சென்ற சிக்கனில் எலும்பில்லை எனக்கூறி சப்ளையரை திமுக பிரமுகர் தாக்கியுள்ளார். காது கேளாமல் போனதாக சப்ளையர் கொடுத்த புகாரில் வாடிக்கையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  சென்னை அடுத்த கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாண்டியன் ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 6-ஆம் தேதி சென்னீர்குப்ம் திமுக மாணவர் அணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் ப்ரை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் சாப்பிட பார்த்தபோது சிக்கன் கறியில் எலும்பு இல்லாமல் கறியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எலும்பை கடித்து சாப்பிட முடியாமல் ஆத்திரமடைந்த கார்த்தி தனது நண்பருடன் ஓட்டலுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

  அப்போது கடையின் சப்ளையர் சாகுல் அமீது என்பவர் அவரை சமாதானம் செய்துள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த கார்த்தி சப்ளையர் சாகுல் கண்ணத்தில் இரண்டு முறை பளார் என அறைவிட்டார். இதில் அந்த ஊழியர் நிலை குலைந்து போனார். இதை அடுத்து கடைக்குள் இருந்தவர்கள் ஓடிவந்து சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் கார்த்தி தனது நண்பருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

  மேலும் படிக்க.. 4 பெண்களை மணந்து திருமண மோசடி - காவலர் மகன் கைது..

  இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கன்னத்தில் அறைந்ததில் சாகுல் அமீதுக்கு காது கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடை உரிமையாளர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  ஆனால் சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் பூந்தமல்லி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஓட்டல் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.


  ஏற்கெனவே ஓட்டலில் பிரியாணி கொடுக்கவில்லை எனக்கூறி ஊழியரிடம் தகராறில் ஈடுப்பட்ட விவகாரங்களில் திமுக பிரமுகர்கள் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு திமுக பிரமுகர் சிக்கனில் எலும்பில்லை என நூதன காரணம் கூறி சப்ளையரை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: