நியூஸ் 18 செய்தி எதிரொலி: இ-பாஸ்க்கு லஞ்சம் பெற்ற உதவி ஆட்சியர் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

இ-பாஸ்க்கு லஞ்சம் பெற்ற உதவி ஆட்சியர் யார் என்பது தொடர்பாக மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

நியூஸ் 18 செய்தி எதிரொலி: இ-பாஸ்க்கு லஞ்சம் பெற்ற உதவி ஆட்சியர் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
சென்னை மாநகராட்சி அலுவலகம்
  • Share this:
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உயரும் கொரோனா பாதிப்பின் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு, உரிய ஆதாரங்கள் உள்ள நபர்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில தனியார் கால் டாக்ஸி நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடாக இ-பாஸ் பெற்று தினமும் பயணிகளை சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் அழைத்து வருவது அம்பலமாகி வருகிறது.

இது குறித்து நியூஸ் 18 நடத்திய ஆய்வில், ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கால் டாக்சி நிறுவனம் ஒன்று சென்னையில் உள்ள உதவி ஆட்சியருக்கு லஞ்சம் கொடுத்து இ-பாஸ் பெற்றது அம்பலமானது. ஒவ்வொரு இ-பாஸ்க்கும் 1000 ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தனியார் கால் டாக்ஸி ஏஜென்ட் மூலம் கண்டுபிடித்து செய்தி வெளியிடப்பட்டது.


Also see:

 இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புக் குழு சார்பில் சம்பந்தப்பட்ட உதவி ஆட்சியர் யார் என்று கண்டுபிடிக்கும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரி விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading