திருமணமாகி 31 நாட்களில் விமானப் பணிப்பெண் தற்கொலை.. என்ன நடந்தது?

சென்னையில் முன்கோபத்தால் திருமணமான 31 நாளில் விமான பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுமணப்பெண்ணை கோபத்திற்கு தள்ளியது எது?

  • Share this:
சென்னை, மீனம்பாக்கம் ஏர்-இந்தியா குடியிருப்பில் வசிப்பவர் 30 வயதான சரண்குமார். கப்பல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி 28 வயதான அன்பரசி ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்பாட்டில் கடந்த மாதம் 13-ஆம் தேதி சென்னையில் விமர்சையாக திருமணம் நடந்தது.

கொரோனாவால் அதிக உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்க முடியாத நிலையில், திருமணத்தை சமூக வலைதளம் மூலம் நேரலை செய்தனர். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் கருத்தொற்றுமை ஏற்படாமல் சண்டை போட்டு வந்துள்ளனர். புதன்கிழமை காலை முதல் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்பரசி மிகவும் கோவமாக இருந்துள்ளார்.

வீட்டில் காலை முதல் சமைக்காததால் மதியம் சரண்குமார் சாப்பாடு வாங்க கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் தனது மனைவி அன்பரசி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


மேலும் படிக்க...

சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் பேசவில்லை.. அவருடன் பேச விருப்பமும் இல்லை’ - டொனால்ட் ட்ரம்ப்

Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 16, 2020)இதுகுறித்து பக்கத்து வீட்டினர் மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்கு பதிவு செய்து கணவன்-மனைவி இடையில் எதனால் தகராறு ஏற்பட்டது என்பது குறித்து அவரது கணவர் சரண்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அன்பரசி தற்கொலைக்கு கணவருடனான தகராறுதான் காரணமா? அல்லது விமான நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் யாராவது தொல்லை தந்தார்களா? என விசாரித்து வருகின்றனர்.

 

திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ.(RDO) விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. விமான பணிப்பெண் திருமணமாகி ஒரு மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களை சோகத்தில் தள்ளியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

 
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading