ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

76 ஆண்டுகளுக்கு சென்னைக்கு புதிய ஏரி... தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கத்தின் சிறப்பம்சங்கள்

76 ஆண்டுகளுக்கு சென்னைக்கு புதிய ஏரி... தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கத்தின் சிறப்பம்சங்கள்

தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம்

தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைக்க உள்ள தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கத்தின் சிறப்பம்சங்கள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே திருவள்ளூரில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும், கடலூர் வீராணம் ஏரியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

  2013ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்திற்காக 380 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 1485 ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த ஏரியில் 500 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர், கண்டலேறு - பூண்டி கால்வாயிலிருந்து 8.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு இணைப்புக் கால்வாய் அமைத்து இங்கு கொண்டு வரப்படும்.

  இதன் மூலம், சென்னையின் குடிநீர் பயன்பாட்டிற்கு தினமும் 65 மில்லியன் லீட்டர் நீர் பெறப்படும். மேலும், 5 மதகுகள் அமைத்து கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிகளின் பாசனத்திற்கும் தண்ணீர் வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள 5 ஏரிகளின் மூலம் மொத்தம் 12, 722 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய நீர் தேக்கத்தின் மூலம் கூடுதலாக கிடைக்கும் 500 மில்லியன் கன அடி நீரையும் சேர்த்து மொத்தம் 13,222 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும்.

  புதிய நீர்த்தேக்கத்தில் தற்போது இருக்கும் 138 மில்லியன் கன அடி நீருடன் சேர்த்து, மொத்தம் 8,237 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னையின் குடிநீர் பயன்பாட்டிற்காக கடைசியாக 1944-ஆம் ஆண்டு பூண்டியில் சத்யமூர்த்தி நீர் தேக்கம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், 76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai