வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக குறையை கூறலாம் - சென்னை புதிய காவல் ஆணையர்

Chennai | மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு சுழற்றி முறையில் பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னையின் புதிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக குறையை கூறலாம் - சென்னை புதிய காவல் ஆணையர்
மகேஷ் குமார் அகர்வால்
  • News18
  • Last Updated: July 2, 2020, 10:26 PM IST
  • Share this:
சென்னை காவல் துறையில் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவரிடம் சென்னை காவல்துறையின் காவல் ஆணையரான ஏ.கே விஸ்வநாதன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,


கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வரமுடியாத நிலை இருப்பதால் வீடியோ கால் மூலம் தன்னிடம் நேரடியாக பேசி தங்களது குறைகளை சொல்லலாம் எனவும், வாரம் ஒருமுறை அல்லது இருமுறை வீடியோ கால் பேசுவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் 20000 காவலர்கள் பணியில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அவர்களுக்கு நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார்

மன அழுத்தம் உள்ள காவலர்களை தனியாக பிரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், அவர்களுக்கு இதற்காக பயிற்சி கொடுக்கப்படும் எனவும் அந்தப் பயிற்சியானது வருகின்ற 10ம் தேதியிலிருந்து காவலர்களுக்கு சுழற்சி முறையில் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


படிக்க: Fact Check | கொரோனாவால் இறந்தவர்களின் உடல் ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசப்பட்டதா?


படிக்க: பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை








சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க நிலையான வழிகாட்டு முறையயை வகுக்க உள்ளதாகவும் இந்த குற்றங்களில் குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர் நேரடி தொடர்பில்லாததால் விழிப்புணர்வு மூலமாக குற்றங்களை தடுக்கலாம் எனவும் தெரிவித்த அவர், ஆர்.பி.ஐ மற்றும் காவல் துறைக்கு 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பணம் இழப்பை தவிர்க்கலாம் என்றார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading