• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிறப்பான வசதிகள், மேம்பட்ட சிகிச்சை...! சென்னையில் முழுவதும் குளிரூட்டப்பட்ட புதிய அரசு மருத்துவமனை

சிறப்பான வசதிகள், மேம்பட்ட சிகிச்சை...! சென்னையில் முழுவதும் குளிரூட்டப்பட்ட புதிய அரசு மருத்துவமனை

Youtube Video

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய அரசு மருத்துவமனை மேம்பட்ட தரத்தில், சிறப்பான வசதிகளுடன் இயங்கி வருகிறது. 

சென்னை வாலாஜா சாலையில் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்ற புதிய அரசு மருத்துவமனை திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. முழுவதுமாக குளிரூட்டப்பட்ட இந்த மருத்துவமனை, 500 படுக்கைகள் கொண்டது. 205 மருத்துவர்கள், 210 செவிலியர்கள், 215 மருத்துவ பணியாளர்கள் கொண்டு இயங்கும் இந்த மருத்துவமனையில் அனைத்தும் துறைகளும் உள்ளன.

 1000  புற நோயாளிகளும்,  500 உள் நோயாளிகளும் சிகிச்சைப் பெறுகின்றனர். ஏழு தளங்கள் கொண்ட மூன்று அடுக்குமாடி கட்டிடங்களில் மருத்துவமனை அமைந்துள்ளது. 2 அடுக்குமாடி கட்டிடங்களில் மாணவர் விடுதி மற்றும் பணியாளர் குடியிருப்புகள் உள்ளன.

மருந்தியல், அறுவை சிகிச்சை, எலும்பியல், மனநலம், சிறுநீரகவியல், குழந்தைகள் நலன்,  என அனைத்து துறைகளும் உள்ளன. 30 நொடிகளில் உடல் முழுவதும் ஸ்கேன் செய்யும் 16 ஸ்லைஸ் ( slice) CT ஸ்கேன் வசதி உள்ளது.



"அதி நவீன வசதிகளுடனான அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளது. கடற்கரை சாலைக்கு அருகில் இருக்கும் முதல் அரசு மருத்துவமனை இது என்பதால் விபத்தில் சிக்கியவர்கள் அதிகம் வரக்கூடிய மருத்துவமனையாக இது இருக்கும். அதற்கு ஏற்ற படி, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளிகளை கொண்டு செல்ல நேரடி தனி நுழைவாயில் உள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகிலேயே அறுவை சிகிச்சை அரங்கு உள்ளது. CT ஸ்கேன் மையமும் அருகிலேயே இருப்பதால் உடம்பில் என்ன கோளாறு என்பதை உடனே கண்டறிந்து சிகிச்சையை தொடங்க வசதியாக உள்ளது." என மருத்துவமனை முதல்வர் நாராயணபாபு தெரிவிக்கிறார்.

"இங்குள்ள CT ஸ்கேன் உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் துல்லியமாக படம் எடுத்து காட்டக்கூடியது. இதற்கு 30 நொடிகள் மட்டுமே ஆகும். இதற்கு முன்பு அரை மணி நேரம் வரையாகும். ஸ்கேன் செய்யப்பட்ட பகுதிகளின் 3டி படங்கள் உடனடியாக கிடைத்து விடும். அம்மா மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக ஸ்கேன் எடுக்கப்படுகிறது" என கதிரியக்கவியல் துறைத் தலைவர் மரு. சுஹாசினி தெரிவிக்கிறார்.



இந்த மருத்துவமனை தொடங்கி 20 நாட்களில் 500 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு 25-30 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதற்கு 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன.

"எலும்பியல் துறை சார்பாக  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்த  நோயாளிகளை கவனிக்க தனியாக சிறப்பு வார்டும் மற்ற நோயாளிகளுக்கு தனி வார்டும் உள்ளது" என்கிறார் எலும்பியல் துறைத் தலைவர் மணிமாறன்.

ரத்த மாதிரி, சிறுநீர் மாதிரியில் எடுக்கப்படும் அனைத்து வகையான பரிசோதனைகள், டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ முறை தனி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கு இடையே உள்ள இடத்தில் மூலிகை செடிகள் வளர்க்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: