சென்னையில் கொரோனா பாதிப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட 444 மரணங்கள்

சென்னையைப் பொறுத்தவரை, தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், ஒரே நாளில் 1171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட 444 மரணங்கள்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 23, 2020, 8:11 AM IST
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ஒரே நாளில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 849 பேர் உள்பட இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், ஒரே நாளில் 1171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் தொடர்ந்து, 10 நாட்களாக நாள்தோறும் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவந்த நிலையில், ஒரே நாளில் அந்த எண்ணிக்கை 4600-ஐ கடந்துள்ளது.


தமிழகத்தில் மேலும் 74 பேர் உயிரிழந்தனர். சென்னையில் வேறு காரணங்களால் இறந்ததாகக் கூறி, கணக்கில் சேர்க்கப்படாத 444 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த உயிரிழப்பு 1939-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் அளவு 3,144-ஆக உள்ளது.
படிக்க: மார்ச் மாதத்தைவிட ஜூன் மாதத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணம்- காரணம் என்ன?படிக்க: செல்ல மகனிடம் அன்பை பொழியும் நடிகை ஏமி ஜாக்சன் - கியூட் புகைப்படங்கள்

படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
தமிழகத்தில் ஒரே நாளில் 4910 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தோர் விகிதம் 70 சதவீதத்தை தாண்டி, மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் அதிகபட்சமாக 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 20 லட்சத்து 15 ஆயிரத்து 147 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading