PM Modi | அவ்வையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி உரையாற்றி பிரதமர் மோடி

PM Modi | அவ்வையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி உரையாற்றி பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

PM Modi in Tamilnadu | இந்நாளில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நாம் மறந்துவிட கூடாது.

  • Share this:
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி அவ்வையார், மகாகவி பாரதியார் பாடல்களை மேற்கொள் காட்டி பேசினார்.

    தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னை வந்த பிரதமர் மோடிக்கு அதிமுக, பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கு விழா மேடைக்கு வந்த மோடி வண்ணாரபேட்டை - விம்கோ மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து, நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் போராட்டம் வருத்தம் தருவதாக தெரிவித்தார். விவசாயம் குறித்து அவ்வையாரின் பாடலையும் மோடி மேற்கொள் காட்டினார்.

    அவ்வையார் எழுதிய “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், குடி உயர கோன் உயரும்“ என்ற பாடலை மேற்கொள் காட்டி விவசாயத்தின் பெருமையை எடுத்துரைத்தார்.

    மேலும் இந்நாளில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நாம் மறந்துவிட கூடாது. அவர்களின் தியாகம் ஈடுசெய்ய முடியாத ஒன்று. இந்தியாவின் ஆயுத பலம் உலகிற்கே தெரியும் என்று தெரிவித்த மோடி பாரதியின் பாடலை மேற்கொள் காட்டினார்.

    மகாகவி பாரதியின் பாடலான, ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம், கல்வி சாலைகள் அமைப்போம் என்று இந்தியாவின் ஆயுத பலம் குறித்தும் பெருமிதம் தெரிவித்தார். நவீன ஆயுதத்தின் முக்கியத்துவத்தை கூறிய அவர் உள்நாட்டிலேயே ஆயுதம் செய்வோம் என்று பாரதி அன்றே பாடிவைத்துள்ளார் என்பதையும் எடுத்து கூறினார்.
    Published by:Vijay R
    First published:

    சிறந்த கதைகள்