நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: சிபிசிஐடி தீவிர விசாரணை..!

கல்லூரி மாணவன் மற்றும் தந்தையிடம் போலீசார் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: சிபிசிஐடி தீவிர விசாரணை..!
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: February 26, 2020, 10:41 AM IST
  • Share this:
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்தவர்களின் படத்தை வெளியிட்டு அவர்களைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மர்ம நபர் ஒருவர் இமெயில் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவனுக்கு, இந்தி தெரியாது என்றும் பீகாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தனுஷ் மீது சந்தேகம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் பூக்கடை போலீசாரிடம் புகார் அளித்தது. கல்லூரி நிர்வாகத்தின் புகாரை அடுத்து அந்த மாணவன் கல்லூரிக்கு வருவதுமில்லை என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் புகாரின் அடிப்படையில் பூக்கடை தனிப்படை போலீசார் ஓசூர் சென்றனர். ஆனால் மாணவனும், அவரது தந்தையும் கடந்த சில நாட்களாகவே தலைமறைவாகி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.


நீட் ஆள்மாறாட்டம் குறித்த வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியில் தலைமறைவான இரண்டாம் ஆண்டு மாணவனுக்கும் நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு இருக்குமோ என்ற அடிப்படையில் சிபிசிஐடி போலிசாருக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பூக்கடை போலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது உறுதியானதை அடுத்து புதிய வழக்கு ஒன்றை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தனுஷ் மற்றும் அவரது தந்தையைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

2018ஆம் ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 2500 மாணவர்களுள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் யார் யாரென சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.Also see:
First published: February 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading