அத்திவரதர்: துணை ராணுவ பாதுகாப்பு தேவை - உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திவரதர் தரிசன பாதுகாப்பு கோரிய வழக்கை நாளை விசாரிப்பதாக ஒத்திவைத்தனர்.

அத்திவரதர்: துணை ராணுவ பாதுகாப்பு தேவை - உயர் நீதிமன்றத்தில் முறையீடு!
24- ம் நாள் அத்திவரதர்
  • News18
  • Last Updated: July 24, 2019, 12:51 PM IST
  • Share this:
அத்திவரதர் தரிசனத்திற்கு மத்திய பாதுகாப்பு படை பிரிவின் பாதுகாப்பை வழங்க கோரி வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை அக்கோயிலின் மூலவரான அத்திவரதர் எழுந்தருளும் வைபம் கடந்த ஜுலை 1-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் அத்திவரதர் தரிசினத்தில் பாதுகாப்பு இல்லை என்று வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.


இந்த மனுவில், ”அத்திவரதர் வைபவத்தில் முறையான பாதுகாப்பு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் கூட்ட நேரிசலில் சிக்கி 27 பேர் வரை இறந்திருப்பதாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்” என்று  குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அத்திவரதர் தரிசனத்தால், வரதராஜ பெருமாள் கோவில் மூலஸ்தானம் சென்று வழிப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிலர் குற்றச்சாட்டினார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள் அத்திவரதர் தரிசன பாதுகாப்பு கோரிய வழக்கோடு சேர்த்து நாளை விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை நாளைவரை ஒத்திவைத்தனர்.மேலும் படிக்க... காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading