மாணவிகளுக்கு உடலுறவு பற்றி பாடம் எடுத்த கணித ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு...!

மாணவிகளுக்கு உடலுறவு பற்றி பாடம் எடுத்த கணித ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு...!
News18
  • News18
  • Last Updated: November 15, 2019, 9:14 AM IST
  • Share this:
இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே செக்ஸ் பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கொங்களம்மன் கோவில் அரசு நடுநிலைப்பள்ளி கணித  ஆசிரியர் சுரேஷ், 37. இவர் இப்பள்ளியில் படிக்கும் 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டியதுடன் பாலியல் தொந்தரவும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஜாதி பெயரை சொல்லியும் திட்டியுள்ளார்.

இது குறித்து வந்த புகாரின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணைக்கு உத்தரவிட்டனர். மாணவிகள் 8 பேரும் கொடுத்த புகார் கடிதத்தின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஆசிரியர் சுரேைஷ சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியா கொங்களம்மன் பள்ளிக்கு சென்று நேரடியாக விசாரணை மேற்கொண்டார். பள்ளி மாணவிகளிடம் மற்றுமின்றி தற்போதைய தலைமை ஆசிரியர் மாதையன், முன்னாள் தலைமை ஆசிரியைகள் கெளரி, திலகவதி ஆகியோரிடமும் விசாரித்து அறிக்கை பெற்றுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் சுரேஷ் மீது புகார் அளித்தனர். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் இந்திரா, செக்ஸ் பாடம் நடத்திய சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

மேலும், இரவோடு இரவாக ஆசிரியர் சுரேசை கைது செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.

Loading...

First published: November 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com