திரைப்பட இயக்குநர் ஆபாசமாக பேசி சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டி திரைப்பட இசையமைப்பாளர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் வசித்து வருபவர் சிவனேஷ் என்ற ஜோகன்; சினிமாத்துறையில் மியூசிக் டைரக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி கேகேஆர் பட நிறுவனத்திற்கு இசையமைப்பாளராக பேசப்பட்டு முன் பணம் சுமார் 2 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு பாடல்கள் இசை அமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் இவரது அனுமதி இல்லாமல் யாரிடமும் முடிக்கப்பட்ட பதிவை கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குனர் சக்தி பாலாஜி என்பவர் இறுதிகட்ட பாடல் வடிவத்தை கேட்டபொழுது தயாரிப்பாளரிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்தி பாலாஜி பாடல்களை கேட்டு தொலைபேசியில் தொல்லை கொடுத்ததோடு ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இதனையடுத்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜோகன் சிவனேசன் புகார் அளித்துள்ளார்.
மேலும் அதில் சக்தி பாலாஜி என்பவர் தனது முகநூல் பக்கங்களில் குறுஞ்செய்திகள் மற்றும் இசையமைப்பாளரின் வாழ்வை கெடுக்கும் விதத்தில் ஜோகன் சிவனேசனை எந்த இயக்குனரும் அணுக வேண்டாம் என பதிவிட்டு உள்ளதாக, புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.