ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய 2பேர் கைது - போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சென்னையில் நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய 2பேர் கைது - போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கொலை திட்டம் தீட்டியிருந்த 2 பேர் கைது

கொலை திட்டம் தீட்டியிருந்த 2 பேர் கைது

பல நாச வேலைகளில் ஈடுபட்டு இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

நண்பரின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க நாட்டு 5 வெடிகுண்டுகளோடு திட்டம் போட்டு வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய B-கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகளான நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (23) (எ) பீடி தினேஷ் மற்றும் போரூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது அஜீம்(22) ஆகியோர் பழைய குற்ற வழக்கில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தனிப்படை போலீசார் ரவுடிகளான இவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பீடி தினேஷ் மற்றும் முகமது அஜீம் உள்ளிட்டோர் போரூர் பெருமாள் கோவில் பகுதியில் உள்ள பாரதியார் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தலைமறைவாக தங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள் தங்கி இருந்த வீட்டை போலீசார் சோதனை செய்தபோது ஐந்து நாட்டு வெடிகுண்டுகள், பட்டா கத்தி ஒரு கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரை கொலை செய்வதற்காக திட்டமிட்டதும் அதன்பேரில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்திகள் வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்.. 24 இடங்களுக்கு நோ.. அனுமதி அளிக்கப்பட்ட 3 இடங்கள் எவை?

கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் குளக்கரை தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (எ) குள்ள குமாரை அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் (எ) சாம்பார் தனசேகர் மற்றும் அவரது நண்பர்களான பார்த்திபன், ராஜா ஆகியோர் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தனர். தனது நண்பரான குள்ள குமாரை கொலை செய்த தனசேகரை கொலை செய்வதற்காக பீடி தினேஷ் திட்டமிட்டு வந்ததும் அதற்கு தனது நண்பரான முகமது அஜீமை கூட்டு சேர்த்துக் கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரிடமிருந்து ஐந்து நாட்டு வெடிகுண்டுகள் வாங்கியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பீடி தினேஷ் மற்றும் முகமது அஜீம் ஆகியோர் மீது நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, பாண்டி பஜார், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai, Crime News