• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 200 முதல் அதிகபட்சம் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் காய்ச்சல் முகாம்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முகாம் 2-வது நாளாக நடைபெற்றது. இதில் சுமார் 16 ,000 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

    முதல் நாளில் 18 ஆயிரத்து 99 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அறிகுறி உள்ள 247 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனையின்போது 45 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 200 முதல் அதிகபட்சம் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

    ALSO READ |  தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் வழிகாட்டு நெறிமுறையை மீறினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாயும்,தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: