நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பொதுமேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகரில் இயக்கப்படும் 3584 பேருந்துகளில் 1775 பேருந்துகளின் H.F.C மற்றும் F.C ஆகியவை அடுத்த மாதத்திற்குள் காலாவதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவற்றை புதுப்பித்து தகுதி சான்று வாங்க வேண்டி உள்ளதால் M.T.C, F.C மற்றும் R.C யூனிட்டுகளில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சுழற்சி அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 50 விழுக்காடு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும், பணிக்கு வரும் ஊழியர்கள் முகக் கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், பணிபுரியும் இடங்களில் 3 அடி தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also see...
கொரோனா ரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்: அச்சத்தில் உ.பி. மக்கள்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Chennai, Lockdown, Transport workers