சென்னையில் மாயமான கொரோனா தொற்றாளர்களில் பிடிபட்டவர்கள் எத்தனை பேர்? மாநகராட்சி ஆணையர் விளக்கம்

கொரோனா முகாமில் உள்ள ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 350 ரூபாய் உணவுக்கு மட்டும் அரசு ஒதுக்கி உள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

சென்னையில் மாயமான கொரோனா தொற்றாளர்களில் பிடிபட்டவர்கள் எத்தனை பேர்? மாநகராட்சி ஆணையர் விளக்கம்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: June 19, 2020, 5:03 PM IST
  • Share this:
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவர் கூறுகையில், சென்னையில் வீடு வீடாகச் சென்று அறிகுறிகள் பரிசோதனை செய்யும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, அறிகுறி உள்ளவர்கள் அதிகமாக கண்டறியப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும், தங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை மக்கள் சரியாக தெரிவிப்பது இல்லை என்றும், மாநகராட்சி கள பணியாளர்களிடம் அறிகுறிகள் இருந்தால் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தவர், மக்கள் முன்கூட்டியே தங்கள் அறிகுறிகளை தெரிவித்து இருந்தால், இன்னும் பல இறப்புகளை தவிர்த்து இருக்கலாம் என்றார்.

படிக்கசுஷாந்த் சிங் பிரிவால் தவித்து வாடும் செல்லப்பிராணி

படிக்கராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு..


மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 40,882 நபர்கள் அறிகுறிகள் உடன் கண்டறியப்பட்டு, 6,391 நபர் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. வார்டு தோறும் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை மக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தவர், மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தி விடலாம் என்றார்.

”சென்னையில் காணாமல் போன 299 நோயாளிகளில் நோயாளிகள் 150 நபர்கள் கண்டறியப்பட்டு மீண்டும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் அண்ணா பல்கலை விடுதிகளை மாநகராட்சி வசம் கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

தனிமைப் படுத்தப்பட்டு உள்ள சில மையங்களில், நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சிரமம் இருந்தது. இது உடனடியாக சரி செய்யபடும் என்றவர், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 350 ரூபாய் உணவுக்கு மட்டும் அரசு ஒதுக்கி உள்ளது என்றார்.

 
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading