• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்ற லாரி க்ளீனர் - போக்சோ சட்டத்தில் கைது

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்ற லாரி க்ளீனர் - போக்சோ சட்டத்தில் கைது

கைதான திருப்பதி

கைதான திருப்பதி

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை கடத்திச் சென்ற நபரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

  • Share this:
    பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று தொல்லை கொடுத்த இளைஞர்  போக்சோ சட்டத்தில் கைது செய்ட்த காவல்துறையினர்.

    சென்னை திருவொற்றியூர் சேர்ந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி பள்ளியில் வேலை இருப்பதாக சொல்லி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    Also Read: அந்த மனசுதான் சார் கடவுள்.. ஆப்கான் குழந்தைகளை அரவணைக்கும் அமெரிக்க வீரர்கள்

    கடந்த ஒரு வாரமாக தேடி வந்த நிலையில் பெற்றோர்கள் அளித்த தகவல்படி ஒரு அலைபேசி எண் கிடைத்தது. அந்த எண் வைத்து காவல்துறையினர் பின்தொடர்ந்து  சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் இளைஞனை கைது செய்து பத்திரமாக சிறுமியை மீட்டு இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் இளைஞர் வைத்து விசாரணை மேற்கொண்டதில்: சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி வயது19  லாரி கிளீனராக வேலை செய்து வந்தனர். சென்னை திருவொற்றியூர் சேர்ந்த  பன்னிரண்டாம் வகுப்பு மாணவியுடன் திருப்பதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பழக்கமாகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .இரண்டு முறை திருப்பதி  சென்னை வந்து சிறுமியை பார்த்து விட்டு சென்றதாகவும் அதை தெரிந்த சிறுமியின் தாயார் திட்டியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த விஷயத்தை  சிறுமி திருப்பதியிடம் தெரிவித்தபோது  தன்னுடன் வந்து விடுமாறும் திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி  சேலத்திற்கு  வருமாறு அழைத்துள்ளார். இதன்பேரில் இருவரும் கடந்த 14ஆம் தேதி சென்னை  கோயம்பேடு சென்று அங்கு  இருந்து சேலம் சென்று சேலத்தில் இருந்து திருப்பதி வீட்டிற்கு அழைத்து சென்று தங்க வைத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Also Read:  மலைக்கோயில் திருவிழாவில் விபரீதம்.. சாமியாடிய பூசாரி மலையில் இருந்து விழுந்து பலி

    அதனைத் தொடர்ந்து திருப்பதி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: அசோக் குமார் 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: