Home /News /tamil-nadu /

மீஞ்சூர்- வண்டலூர் வெளி வட்டச் சாலையில் நாளைமுதல் சுங்கக் கட்டணம் வசூல்

மீஞ்சூர்- வண்டலூர் வெளி வட்டச் சாலையில் நாளைமுதல் சுங்கக் கட்டணம் வசூல்

வெளிவட்ட சாலை

வெளிவட்ட சாலை

மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையை சுமார் 30 ஆயிரம் வாகனங்கள் நாளொன்றுக்கு பயன்படுத்தும் என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவிலும் பகல் போன்று இருக்கும் அளவிற்கு 60 கிலோமீட்டர் தூரத்திற்கும் மின்விளக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    மீஞ்சூர் வண்டலூர் வெளி வட்டச் சாலையில் 4 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் பணி நாளை முதல் துவங்கும் என தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சென்னை  மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 60 கிலோமீட்டர் தூர வெளிவட்ட சாலையானது ரூபாய் 2,156 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன. முதற்கட்டமாக வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரை முடிவடைந்த நிலையில் தற்போது நெமிலிச்சேரி துவங்கி மீஞ்சூர் வரை இரண்டாம் கட்ட பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டுள்ளன.

    மூன்று இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மட்டும் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 2-வது வாரத்தில் இருந்து சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. வெளிவட்ட சாலையை சுமார் 30 ஆயிரம் வாகனங்கள் நாளொன்றுக்கு பயன்படுத்தும் என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவிலும் பகல் போன்று இருக்கும் அளவிற்கு 60 கிலோமீட்டர் தூரத்திற்கும் மின்விளக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவ உதவி மையம், அவசர கால தொலைபேசி வசதி போன்ற நவீன வசதிகளுடன் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டு கனரக வாகனங்கள் வெளி வட்டச் சாலையில் எவ்விதக் கட்டணமுமின்றி சென்று வந்தன

    இதையும் படிங்க: முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனை ஜோர்... புத்தாண்டு விற்பனையை தாண்டியது


    இந்நிலையில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுங்க வசூல் செய்யும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது .அதன்படி பாஸ்ட்ராக் (Fastag) வசதி உள்ள வாகனங்கள் தனியாக கட்டணம் செலுத்தும் ஏற்பாட்டையும் பிற வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    ரூபாய் 2156 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சாலை மூலம் இதன் ஓரம் அமைந்துள்ள திருமுல்லைவாயல் மகளிர் தொழில் பூங்கா, அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் ஓரக்கடம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டை களுக்கு செல்லும் வாகனங்கள் குறைந்த நேரத்தில் பயணிக்க முடியும். நாளை முதல் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை உள்ள வெளிவட்ட சாலையில் 4 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு வசூல் செய்யும் பணிகள் நடைபெறும். அதற்கான டெண்டர்கள் விடப்பட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் படிக்க: தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


    இந்த சாலை சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னை புறநகரில் உள்ள தொழிற்பேட்டைகாளான எண்ணூர் காட்டுப்பள்ளி சிறப்பு பொருளாதார மண்டல தொழிற்பேட்டை காக்களுர் மற்றும் பட்டாபிராம் பகுதி தொழிற்சாலைகள் பெருமளவுக்கு பயன் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
    Published by:Murugesh M
    First published:

    Tags: Toll gate, Toll Plaza

    அடுத்த செய்தி