’மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவு ஈடேறாது’ - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு.

’மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவு ஈடேறாது’ - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
அமைச்சர் செல்லூர் ராஜு
  • News18
  • Last Updated: August 21, 2019, 2:08 PM IST
  • Share this:
மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு இலவு காத்த கிளி போலதான் என்றும் திண்ணை காலியாகாது அவரின் முதல்வர் கனவு ஈடேராது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

கூட்டுறவு கோப்புகள் ஆய்வுக் கூட்டம் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது கோப்புகளை ஆய்வு செய்த கூட்டறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், பொது வினியோகம், குறித்த தரவுகளை சரிபார்த்தார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு இலவு காத்த கிளி போல.. திண்ணை எப்போதும் காலியாகாது. அவரின் முதல்வர் கனவு ஈடேராது. தி.மு.க ஆட்சி காலத்தில் 26,000 கோடி ரூபாய இருந்த கூட்டறவு வங்கிகளின் வைப்புத்தொகை தற்போது 52,000 கோடியாக உயர்ந்துள்ளது” என்றார்.


உள்ளாட்சித் தேர்தல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ’உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்” என்றார். அதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு, “ப.சிதம்பரம் விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்ற அவர் ஜெயலலிதாவின் மாணவர் எடப்பாடி என்பாதலேயே 9 முறை யோசித்தால் 16 முறை யோசிப்பார் என்றேன் அதை கிண்டல் செய்து பெரிதாக்கிவிட்டனர்” என்றார்.

விவசாயிகளுக்கு பயிர்கடன் ரத்து என்பதை பற்றிய கேள்விக்கு, ‘பயிர்கடன் ரத்து விவகாரத்தில் அரசு சொன்னதை செய்திருக்கிறது. சொல்லாததையும் செய்ய சொல்கிறார்கள். மேலும் பயிர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் 32, லட்சத்து 72 ஆயிரத்து 291 பேருக்கு ரூபாய் 20, 117 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது” என்றார் .

மேலும் படிக்க... வேலையிழப்பு விவகாரம்! அமைச்சர் எம்.சி.சம்பத் விளக்கம்
First published: August 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்