'தமிழில் மாட்லாடுங்கள்' தெலுங்கில் பேசிய திமுக எம்.எல்.ஏ.வை தமிழில் பேச சொன்ன அமைச்சர் ஜெயக்குமார்

சிறுபான்மையினர் அவர்கள் மொழியிலே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்று தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

'தமிழில் மாட்லாடுங்கள்' தெலுங்கில் பேசிய திமுக எம்.எல்.ஏ.வை தமிழில் பேச சொன்ன அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
  • News18
  • Last Updated: July 12, 2019, 9:10 PM IST
  • Share this:
தெலுங்கில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தளி பிரகாஷ் "தமிழில் மாட்லாடுங்கள்" என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில்,  மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய தளி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பல்வேறு பிரச்னைகளை குறித்து  தமிழில் பேசி வந்தார்.

திடீரென தெலுங்கில் தனது தொகுதி பிரச்னை குறித்து பேசினார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு மொழிமாற்றம் செய்யும் வசதி இங்கு இல்லை என்று கூறினார். நீங்கள் பேசியது அவை குறிப்பிலும் பதிவாகாது. எனவே எல்லோருக்கும் புரியும் வகையில் தமிழில் பேசுங்கள் என்றார்.


மீண்டும் தெலுங்கில் பிரகாஷ் பேச முற்பட்டபோது, அமைச்சர் ஜெயக்குமார் குறுக்கிட்டு, ”மறைந்து முதல்வருக்கு பல மொழிகள் தெரியும், ஆனால் எங்களுக்கு தெரியாது. அதனால் நீங்களும் தமிழிலே மாட்டலாடு ” என்று தெலுங்கு கலந்த தமிழில் உறுப்பினரிடம் வலியுறுத்தினார்.

அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ”தனது தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட  4 மொழிகளில் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் அதிலும் 10-ம் வகுப்பு படிப்பவர்கள் பரிட்சை எழுத மிகவும் சிரமப்படுகிறார்கள்.எனவே அங்குள்ள பல்வேறு அமைப்புகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் எடுக்கவேண்டும்” என்று தமிழில் பேசி கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், சிறுபான்மையினர் அவர்கள் மொழியிலே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்று தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Also watch: சர்வதேச அளவில் ’ராப்’ இசையில் கலக்கும் தஞ்சை தமிழச்சி!

First published: July 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்