Home /News /tamil-nadu /

Cyclone Nivar | சென்னையில் பால் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது: ஆவின் நிறுவனம் அறிவிப்பு..

Cyclone Nivar | சென்னையில் பால் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது: ஆவின் நிறுவனம் அறிவிப்பு..

ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் வேலை

நிவர் புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலானது இன்று மாலை தொடங்கி இரவு வரை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    தற்போது புயல் அதி தீவிர புயலாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. அதனையடுத்து, நிவர் புயல் கரையைக் கடக்கும் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையே அறிவித்தார். அப்போது, நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

    மேலும் படிக்க.. Cyclone Nivar Live : நெருங்கும் நிவர் புயல் - தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை



    இந்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருளான பால் விநியோகம் சென்னையில் பாதிக்கப்படாது என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஆவின் பாலகங்கள் மற்றும் டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது தவிர நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலமும் நகரின் பிரதான பகுதிகளில் பால் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Aavin, Chennai, Cyclone Nivar, Heavy Rainfall, Milk, Nivar, Tamil Nadu Weather, Tamilnadu weather man, Weather

    அடுத்த செய்தி