சென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஜூலை மாத மத்தியில் 2.75 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
கோப்புப்படம் (PTI)
  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டு வரும் நிலையில், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 12 நாள் ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் உச்சமடைவது இருவாரங்கள் தள்ளிப்போகக் கூடும்.

அடுத்து வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் ஜூலை மாத மத்தியில் இரண்டே முக்கால் லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இம்மாத இறுதிக்குள் 71,000 பேரும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 22,000 பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். ஜூலை 15ம் தேதியில் சென்னையில் 1.5 லட்சம் பேரும், தமிழகம் முழுவதும் 2,76,000 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் மற்றும் தொற்றுநோய் துறை தலைவர் சீனிவாஸ் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று கொரோனாவால் சென்னையில் ஜூலை மாத மத்தியில் 1654 பேர் உயிரிழந்திருப்பார்கள். தமிழகம் முழுவதும் 3072 பேர் உயிரிழக்கக் கூடும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்ட பின் இரு வாரங்களில் குறையத் தொடங்கும் பிற மாவட்டங்களில் மக்கள் அடர்த்தி உள்ளிட்ட காரணிகளை பொருத்து வெவ்வேறு கட்டத்தில் குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... தேனாம்பேட்டையில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று - சென்னை அப்டேட்

தொற்று பாதிப்பு கட்டுக்குள் வருவதற்குள் மாநிலம் முழுவதும் 60 விழுக்காடு மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கியிருப்பார்கள் என்று மருத்துவ நிபுணர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு, முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading