முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல்... இதுதான் காரணம்..!

அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல்... இதுதான் காரணம்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

நாட்டிலேயே முதல்முறையாக அமைதி ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உருவெடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக ரயில்கள் வரும் நேரம், சேரும் இடம், நடைமேடை உள்ளிட்டவை ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒலிப்பெருக்கி அறிவிப்பு நிறுத்தப்பட்டு ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடுகளை டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பும் நடைமுறை தொடங்கி உள்ளது.

விமான நிலையங்கள் போல நிமிடத்திற்கு நிமிடம் ரயில்கள் குறித்த விபரங்கள் திரையில் ஒளிபரப்பாகும். அதைப் பார்த்து பயணிகள் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மேலதிக தகவல்களை பெற விசாரணை மையங்களும் உள்ளன. சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம் பயணிகளின் வரவேற்பை பொறுத்து நிரந்தரமாக்கப்படும்.

First published: